அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணக் கொடுப்பனவு: வெளியானது அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணக் கொடுப்பனவு: வெளியானது அறிவிப்பு

2023ஆம் ஆண்டில் அரச உத்தியோகத்தர்களுக்கு 4,000 ரூபாவுக்கும் மேற்படாத விசேட முற்பணம் வழங்கப்பட உள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான சுற்றறிக்கை, அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே. மாயாதுன்னேவினால், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட முற்பணக் கொடுப்பனவு, ஜனவரி முதலாம் திகதி தொடக்கம், பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள் வழங்கி முடிவுறுத்தப்பட வேண்டும்.

பெப்ரவரி 28ஆம் திகதியின் பின்னர் இந்த முற்பணக் கொடுப்பனவு செலுத்தப்படமாட்டாது.

இந்தக் கொடுப்பனவானது, 2023 ஆம் ஆண்டுக்குள்ளேயே அறவிட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image