நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளும் இன்று திங்கட்கிழமை முதல் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பமாகிவுள்ளன.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு கடந்த டிசம்பர் 23ஆம் திகதி முதல் நேற்று வரை சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது. அதற்கமைய இன்று திங்கட்கிழமை மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகிவுள்ளன.
அதனைத் தொடர்ந்து, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நிமித்தம் எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி முதல் பெப்ரவரி 19ஆம் திகதி வரை மீண்டும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர், பெப்ரவரி 20ஆம் திகதி மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகி, மார்ச் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.
2022ஆம் ஆண்டுக்கான இறுதித் தவணை கல்வி நடவடிக்கைகள் மார்ச் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.