அதிபர் - ஆசிரியர்களின் குருசெத்த கடனுக்கான வட்டிவீதம் அதிகரிப்பு: ஜனாதிபதிக்கு கடிதம்

அதிபர் - ஆசிரியர்களின் குருசெத்த கடனுக்கான வட்டிவீதம் அதிகரிப்பு: ஜனாதிபதிக்கு கடிதம்
அதிபர்-ஆசிரியர்கள் குருசெத்த கடனுக்கான கடன் மற்றும் வட்டி தவணைகளை செலுத்தும் போது வட்டி வீதத்தை  அதிகரிக்க எடுத்த தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
 
அதிபர்-ஆசிரியர்கள் குருசெத்த கடனுக்கான கடன் மற்றும் வட்டி தவணைகளை செலுத்தும் போது 9.5% இருந்த வட்டியை 15.5% வரை  அதிகரிக்க எடுத்த தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
'
எனினும். அரசாங்க ஊழியர்களின் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் படி கடனுக்கான வட்டியை உயர்த்துவது பாரிய அநீதியாகும்  என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர்  மஹிந்த ஜயசிங்க, ஜனாதிபதியும் நிதி அமைச்சரும் ஆகிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் என சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
 
இச்சந்தர்ப்பத்தில் , அரச வங்கிகள் மூலம் குருசெத்த கடன் திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெற்றுள்ள குருசெத்த கடனுக்கான வட்டியை அதிகரிக்க வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
 
அரசாங்கத்தினால் முன்மொழிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் அதிபர் ஆசிரியர்களுக்கு எவ்விதமான  சம்பளம் அல்லது கொடுப்பனவுகள் எதுவும் அதிகரிக்கப்படவில்லை.
 
கடன் பெறும் போது அதி கூடிய அறவீடு செய்யக்கூடிய தொகைக்கே கடன் வழங்கப்படும். எனினும் தற்போது வட்டி அதிகரிப்பினால் மாதாந்தம் அறவீடு செய்யப்படும் கடனுக்கான  அறவீடு தொகை அதிகரிப்பினால் கடனாளியிடம் மாதாந்தம் அறவீடு செய்யக்கூடிய தொகைக்கும் பார்க்க அது கூடிய தொகை அறவீடு செய்யப்படுவதனால் சம்பளத்தில் அதிகபட்ச  அறவீடு செய்யும் நிபந்தனையை மீறும் செயலாக இது காணப்படுகின்றது என ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் அரசியல் அதிகாரங்கள் உடைய பொது நிதி முகாமைத்துவத்திற்கு பொறுப்பான நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் நிதி முறைகேடுகளினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அரச ஊழியர்கள் மற்றும் மக்கள் தோள்களில் சுமத்தி செல்லும் அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுகளை தொழிற்சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.
 
இந்த அரசாங்கம் அதிபர், ஆசிரியர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு பதிலாக கஷ்டங்களை வழங்குவதற்கு எதிராக  நடவடிக்கை எடுக்க நேரிடும் என சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image