அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்; மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், நிதி நிலைமையை ஆராய்ந்தன் பின்னரே சம்பள அதிகரிப்புத் தொகை குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதற்கு கடந்த அரசாங்கம் எந்தவிதமான பணத்தையும் ஒதுக்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..
அரச மற்றும் தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்பு மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதை நாம் விரும்புகின்றோம். அதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால் திறைசேரியில் காணப்படும்; பணத்திற்கு ஏற்பவே அதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி நிதியமைச்சர் என்ற வகையில்; அமைச்சரவையில் முன்மொழிவுகளை சமர்ப்பித்து சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுத்திருந்தார். ஆனால் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதற்கு திறைசேரியில் பணம் இருக்குமா என்பதை அவர் யோசிக்கவில்லை. அவர் செய்தது தவறு என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், உதய ஆர். செனவிரத்னவின் குழு அறிக்கையின்படி சம்பள அதிகரிப்புக்கு பணம் ஒதுக்கப்படவில்லை என்பதை நான் மிகத் தெளிவாகக் கூறுகின்றேன். திறைசேரியில்; பணம் இருக்கிறதா இல்லையா என்பதைக்கூட அவர் கவனிக்கவில்லை.
இதே போன்றுதான் இந்த 5000 ரூபாய் கொடுப்பனவும். இது தொடர்பாக, 2024 ஜனவரியில் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டது. ஆனால் அந்தத் தொகையை வழங்குவதற்கு திறைசேரியில் பணம் இல்லை. நாட்டு மக்களை ஏமாற்றும் வேலையை முன்னாள் ஜனாதிபதி மேற்கொண்டார்.
இந்த நாட்டின் அரச ஊழியர்களை நாம் ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம். தபால் மூல வாக்குப் பதிவுகள் இன்னும் ஒரு சில நாட்களில் இடம்பெற உள்ளன. அதனைப் பயன்படுத்தி நாம் உங்களை ஏமாற்ற மாட்டோம். 2025 முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளோம். அந்த உத்தரவாதத்தை நாம் உங்களுக்கு வழங்குகின்றோம். ஆனால் சம்பள அதிகரிப்பு எவ்வளவு என்பதை கூறுவது கடினம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.