தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தும் போது அனைத்து ஆசிரியர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கும் கட்டுப்பாடுகளை விதித்து கல்வி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு விசேட சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காலத்தில் பாடசாலை மாணவர்கள் சமூக வலைத்தளங்களை சுதந்திரமாக பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதையடுத்து, தற்போது எதிர்மறையான விளைவுகள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்ற நிலையில் அது குறித்து கவனம் செலுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர் ஜே எம் டி ஜெயசுந்தரவின் கையொப்பத்துடன் அனைத்து பாடசாலை அதிபர்கள் உட்பட கல்வி அதிகாரிகளுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.