ஆயிரம் ரூபா தேவையானால் 20 கிலோ கொழுந்து - முகாமைக்கு எதிராக தொழிலாளர்

ஆயிரம் ரூபா தேவையானால் 20 கிலோ கொழுந்து - முகாமைக்கு எதிராக தொழிலாளர்

ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற 20 கிலோ தேயிலை பறிக்க வேண்டும் என்று தோட்ட முகாமை மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவ தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நேற்று (3) முன்னெடுத்துள்ளனர்.

சுமார் 300 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். பொகவந்தலவை முகாமையின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 300மேற்பட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தம்மால் 15 கிலோகிராம் தேயிலை மட்டுமே கொய்ய முடியும் என்று தொழிலாளர்கள் தெரித்துள்ளனர். இந்நிலையில் 15 கிலோகிராம் தேயிலை மட்டுமே கொய்ய முடியும் என்றால் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே தொழில் வழங்க முடியும் என தோட்ட முகாமை அறிவுறுத்தியுள்ளது. இதனை எதிர்த்த தோட்ட தொழிலாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொழிலுக்கு செல்லவில்லை.

இந்நிலையில் பொகவந்தலாவை தோட்ட தொழிற்சாலையில் கடமையாற்றும் பொகவந்தலாவை தோட்டத்தின் தொழிற்சாலை ஊழியர்களும் தங்கள் சகாக்களுக்கு தொழில் வழங்காத நிலையில் தாமும் தொழிலுக்கு வரவில்லை என தொழிற்சாலை தொழிலுக்கு செல்வதை தவிர்த்துள்ளனர்.

இதனால் தொழிற்சாலை உற்பத்திகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து தொழிற்சாலை கடமைக்கு சமூகமளிக்காத ஊழியர்களுக்க எதிராக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் தோட்ட முகாமை முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.

இந்த இரண்டு காரணங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 03.05.2021 திங்கட்கிழமை காலை தொழிலாளர்கள் அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பொகவந்தலாவை தோட்ட தொழிற்சாலைக்கு செல்லும் பாதையில் இவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பொகவந்தலாவை மேற்பிரிவு, பொகவந்தலாவை கீழ் பிரிவு, டியன்சின் ஆகிய மூன்று தோட்ட பிரிவுகளை சேர்ந்த 300ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தாம் இதுவரை காலமும் தின சம்பளத்திற்காக கொய்த 15 கிலோகிராம் தேயிலையை தொடர்ந்த கொய்வதற்கு தயாராக உள்ளதாகவும் அதற்கு மேல் தம்மால் தேயிலை கொய்வதற்கு முடியாது என்றும் தெரிவித்தனர்.

மேலும் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு எதிராக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முகாமையால் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை மீள பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

சுமார் ஒரு மணித்தியால அடையாள பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தின் பின்னர் பொகவந்தலாவை பொலிசாரின் அறிவுறுத்தலுக்கு அமைய தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

இவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, முக கவசம் அணிந்து, ஒரு மீற்றர் இடைவெளியை பின்பற்றி இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் அவ்விடத்திற்கு வருகை தந்த தோட்ட உதவி முகாமையாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய தொழிலாளர்களின் பிரதிநிதிகள் தோட்ட முகாமையாளருடன்; கலந்துரையாடலில் ஈடுப்பட்ட தொழிற்சாலை;ககு சென்ற பொழுதும் முகாமையாளர் வருகை தராத நிலையில் வீடுகளுக்கு திரும்பிய தொழிலாளர்கள் தொடர்ந்தும் பணிக்கு செல்லாது உள்ளனர்.

p7

p9

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image