தொழிலாளர்கள் அறிவிக்காது தோட்ட முகாமையால் தொழிற்சங்க சந்தா இடை நிறுத்தம்

தொழிலாளர்கள் அறிவிக்காது தோட்ட முகாமையால் தொழிற்சங்க சந்தா இடை நிறுத்தம்

ஏப்ரல் மாத சம்பளத்தில் தமது தொழிற்சங்கங்களுக்கான சந்தா தொகை தமது சம்பளத்தில் இருந்து அறவிடப்படவில்லை என பெருந்தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தாம் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கத்திற்கான மாதாந்த சந்தா தொகை இதுவரை மாதாந்தம் தமது சம்பளத்தில் இருந்து அறவிடப்பட்டு தொழிசங்கங்களுக்க அனுப்பி வைக்கப்பட்டு வந்த நிலையில் புதிய சம்பள தொகையான ரூபா 1000 நடைமுறைக்கு வந்த நிலையில் ஏப்ரல் மாதம் தமது சம்பள்த்தில் இருந்து சந்தா அறவிடப்படவிலலை என தொழிலாளர்கள் தெரிவிக்கிறனர்.

புதிய சம்பளம் சம்பள நிர்ணய சபையின் ஊடாக தீர்மானிக்கப்பட்டதை தொடர்ந்து கூட்டு ஒப்பந்தம் புதிப்பிக்கப்படாத நிலையில் தற்போது அது செயல் இழந்துள்ளது. இந்நிலையில்; ரூபா 1000 சம்பளம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் தொழிற்சங்க சந்தாவை தோட்ட முகாமை தொழிலாளர்களிடம் இருந்து அறவிடாமல் நிறுத்தியுள்ளது.

தம்முடைய சம்பளத்திலிருந்து இப்பணத்தை தாம் தொழிற்சங்கங்களுக்கு சந்தாவாக கொடுப்பதாகவும் தாம் சந்தாவை நிறுத்த கோரிக்கை விடுக்காத நிலையில் தோட்ட நிர்வாகம் தமது சம்பளத்தில் இருந்து சந்தா தொகையை பிடிக்காது இருப்பது தம்முடைய தொழில் பாதுகாப்பை இழக்கச் செய்யும் செயல் என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நடவடிக்கையானது தமது தொழில் மற்றம் ஏனைய நலன் விடயங்களில் தொழிற்சங்கங்கள் தலையீடு செய்யாமல் இருப்பதற்காக எடுக்கப்பட்டதா என்பது கேள்வி குறியாகவே உள்ளது என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெருந்தோட்ட துறை சார்ந்த தொழிற்சங்கங்களை இல்லாமல் ஆக்குவதற்கு தோட்ட முகாமையால் செய்யப்பட்ட சதியா இது என தொழிற்சங்க பிரதிநிதிகள் கவலை வெளியிடுகின்றனர்.
இது சம்பந்தமாக முதலாளிமார் சம்மேளனத்துடன் தாம் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாகவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Author’s Posts