குளவித் தாக்குதலில் இருந்து தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்க புதிய முயற்சி

குளவித் தாக்குதலில் இருந்து தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்க புதிய முயற்சி

குளவி தாக்குதல் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்ட ஆடைகள் இன்று (26) டிக்கோயா தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன.

டிக்கோயா தோட்ட முகாமையாளரின் முயற்சியில் இவ்வுடைகள் வழங்கப்பட்டுள்ளன. குளவித் தாக்குதலில் மாத்திரமன்றி, மழைக்காலத்திலும் பயன்படுத்தக்கூடிய வகையில் இவ்வுடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சாதாரண முறையில் அணியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பாதுகாப்பு உடைகள், குளவித் தாக்குதல் அபாயம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தலை, முகம், கை போன்ற தாக்குதலுக்குள்ளாகக்கூடிய உடற்பாகங்களை மறைத்துக்கொள்ள முடியும்.

பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக குளவித் தாக்குதல்களுக்குள்ளாகி வருகின்றனர். இதனால் பல தொழிலாளர்கள் உயிரிழக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் தோட்ட நிர்வாகத்தினரும் தொழிலாளர்களை பாதுகாப்பது பாரிய சவாலாக இருந்து வந்த நிலையில் டிக்கோயா தோட்ட நிர்வாகம் இப்பாதுகாப்பு உடைகளை வழங்கியுள்ளன.

டிக்கோயா தோட்டத்தில் பணியாற்றிய தோட்டப பெண் தொழிலாளர் ஒருவர் குளவித் தாக்குதலுக்குள்ளாகி கடந்த மாதம் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்பாதுகாப்பு உடைகளை வழங்கும் நிகழ்வில், தோட்ட முகாமையாளர்கள், உதவி முகாமையாளர்கள், தோட்ட வைத்திய அதிகாரி, கள மேற்பார்வை அதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 ஆர். ராஜேஷ்வரன்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image