பயிலுநர் பட்டதாரிகளை சேவையில் இணைக்க விரைவில் நடவடிக்கை

பயிலுநர் பட்டதாரிகளை சேவையில் இணைக்க விரைவில் நடவடிக்கை

கடந்த அரசாங்கத்தினால் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கு இம்மாத இறுதிக்குள் நிரந்தர நியமனம் வழங்கபபடவுள்ளதாக பொது செவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு விடயப்பொறுப்பு அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய, ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அப்பட்டதாரிக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைககள் அமைச்சின் செலாளரின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சு வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இம்மாத ஆரம்பத்தில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்க எண்ணியிருந்த போதிலும் அமைச்சின் அதிகாரிகள் பலருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டமையினால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இம்மாதம் 8ம் திகதி தொடக்கம் குறித்த பிரிவுகள் செயற்பாடுக​கைளை ஆரம்பிக்கவுள்ளமையினால் நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் 2019ம் ஆண்டு ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் பயிலுநர்களாக 14,284 பேர் ஒரு வருட பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்பட்டனர். அவர்கள் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நிரந்தர நியமனத்திற்கு உள்வாங்கியிருக்கவேண்டும். எனினும் பல்வேறு காரணங்களினால் தாமதமாகியதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image