இலங்கைக்கு ஒரு இலட்சம் தடுப்பு மருந்துகளை வழங்கவுள்ள WHO

இலங்கைக்கு ஒரு இலட்சம் தடுப்பு மருந்துகளை வழங்கவுள்ள WHO

இலங்கையில் கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு விரைவில் ஒரு இலட்சம் தடுப்பு மருந்துகளை உலக சுகாதார தாபனம் வழங்கவுள்ளதாக அரசுக்கு அறிவித்துள்ளது என தடுப்பு மருந்துக்கான குழுவின் தலைவர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பைசர் தடுப்பு மருந்தே இவ்வாறு வழங்கப்படவுள்ளது என்று அவர் தெரிவித்தார் என தேசய இணையதம் தெரிவித்துள்ளது.

இம்மாத இறுதியில் இத்தடுப்பு மருந்துகள் வழங்கப்படும். ஏற்கனவே தடுப்பு மருந்து வழங்குவது குறித்த திட்டமிடலை அரசாங்கம் வகுத்துள்ளது. தடுப்பு மருந்துகளை களஞ்சியப்படுத்தக்கூடிய குளிரூட்டிய களஞ்சியசலை, 20 மில்லியன் சிரின்ஜர்கள் விநியோகித்தல் போன்ற செயற்பாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளன. உலக சுகாதார தாபனமானது நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானவர்களுக்கு அவசியமான தடுப்பு மருந்துகளை வழங்குகிறது. மிகுதியை இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒக்ஸ்பர்ட் தடுப்பு மருந்து மற்றும் சீன தடுப்பு மருந்தை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image