பயிலுநர் பட்டதாரிகளாக மேலும் 8500 பேரை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதல் சுற்றில் அரச சேவை பயிற்சிக்காக தகுதி பெறாத பட்டதாரிகளின் மேன்முறையீட்டை கவனத்திற்கு கொண்டு இவர்கள் இணைக்கப்படவுள்ளன் என்று அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வாய்ப்பு பெற்ற பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் அப்பட்டதாரிகளின் நிரந்தர வதிவிட பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை அரச சேவையில் பயிற்சிக்காக 50,000 பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.