போலாந்தில் தொழில்வாய்ப்பு, ஏமாற்றப்படும் அப்பாவிகள்

போலாந்தில் தொழில்வாய்ப்பு, ஏமாற்றப்படும் அப்பாவிகள்

அதிக வருமானம் தரக்கூடிய தொழில் வாய்ப்புக்களை போலாந்தில் பெற முடியும் என வௌிநாடு செல்ல முயற்சி செய்து வந்தவர்களை ஏமாற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த மோசடி நடவடிக்கையில் சில உள்நாட்டு வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களும் தொடர்புபட்டுள்ளதாகவும் இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போலாந்தில் வேலைவாய்ப்புகள் இருப்பதாக விளம்பரங்கள் செய்வதனூடாக வௌிநாட்டில் வேலை தேடுபவர்கள் கவர்ந்திழுக்கப்படுகின்றனர்.

போலாந்தில் வேலைவாய்ப்பை பெறுறவதற்கு பணி அனுமதி (work permit) அவசியம் என்று போலாந்துக்கான இலங்கை தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது என்றும் பணியத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போலாந்தில் வேலை தேடுபவர்களிடமிருந்து 750 - 1000 அமெரிக் டொலர்களை அறவிடுகின்றனர். இதன்போது இந்தித் தலைநகர் புதுடில்லியில் அமைந்துள்ள போலாந்து தூதரக அதிகாரிகளுடன் நேர்முகத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்து தருவதாக உறுதி மொழி வழங்குகின்றனர் இந்த மோசடிக்குழவினர் என்று தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா டெய்லி நியுஸ் பத்திரிகைக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ​போலாந்து தூதரகம் அமைக்கப்படவில்லை. புது டில்லியில் உள்ள தூதரகமே இலங்கை விவகாரங்களையும் கையாள்கிறது. ஏற்கனவே இலங்கையில் போலாந்து விசா நிலையம் அமைக்க வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு திட்டமிட்டு செய்யப்படும் மோசடி செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கையில் ஒரு விசா நிலையம் ஆரம்பிப்பது அவசியம். போலாந்தில் சிறந்த வேலைவாய்ப்புகள் உள்ளன. அந்த தொழில் வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனினும் வௌிநாட்டு தொழில்வாய்ப்பை தேடும் அப்பாவிகளை முகவர் நிலையங்கள் சுரண்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் தான் நாம் அரசாங்கங்களுக்கிடையில் ஒப்பந்தங்களை மேற்கொள்கிறோம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, போலாந்தில் தொழில்வாய்ப்பை பெறுவதற்கான அனுமதிபத்திரம் கிடைக்காதவரை எந்த முகவர் நிலையங்களுக்கும் பணம் செலுத்த வேண்டாம் என்று இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் வௌிநாடுகளில் தொழில்வாய்ப்பை தேடும் இலங்கையர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image