புதிதாக நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான மகப்பேற்று விடுமுறையை 84 நாட்களாக அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பதற்கான ஆலோசனை வழங்கப்பட்டு ஒரு மாதகாலம் நிறைவடைந்துள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
நியமனம் பெற்ற பெண் அரச உத்தியோகத்தர்களுக்கான மகப்பேற்று விடுமுறை 6 வார காலம் மட்டுமே. அமைச்சரின் ஆலோசனையை நடைமுறைப்படுத்தாமல் செயலாளர் காலம் கடத்துகிறார்.
மகப்பேற்று விடுமுறையை குறைத்து எமது உரிமையை பறிக்க முயலாதீர்கள் என்று அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.