பெப்ரவரி இறுதிக்குள் 14,000 பட்டதாரிகள் பொதுச் சேவையில் இணைக்கப்படுவர்

 பெப்ரவரி இறுதிக்குள் 14,000 பட்டதாரிகள் பொதுச் சேவையில் இணைக்கப்படுவர்

கடந்த அரசாங்கத்தினால் பயிலுநர்களாக இணைக்கப்படட 14,000 பட்டதாரிகள் இம்மாத இறுதிக்குள் அரச சேவையில் உள்வாங்கப்படுவார்கள் என்று அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

“முந்தைய அரசு 2019 ஆம் ஆண்டில் 14,000 பயிற்சி பட்டதாரிகளை பொது சேவையில் சேர்க்காமல் இணைத்துக்கொண்டது. எனினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் அவர்களை பொது சேவையில் உள்வாங்க தற்போதைய அரசாங்கம் முடிவு செய்தது,

கடந்த ஜனவரி மாதத்திற்கு முன்னர் நியமனங்கள் வழங்க தீர்மானித்திருந்த போதிலும் கொவிட் தொற்று காரணமாக அரசாங்கத்தின் பல பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. இதனால் பணிகள் தாமதமாயின. இந்த பட்டதாரிகளை அரசியல் குழுக்களின் தவறான பிரச்சாரத்தால் ஏமாற்ற வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image