டுபாயில் வௌியிடப்பட்ட கொவிட் 19 சுகாதார அறிவுரைகள்

டுபாயில் வௌியிடப்பட்ட கொவிட் 19 சுகாதார அறிவுரைகள்

நீங்கள் டுபாயில் வசிக்கிறீர்களா? உங்களுடன் நெருங்கி பழகிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதா? உடனடியாக நீங்கள் பின்பற்றவேண்டிய சுகாதார வழிமுறைகள் என்ன? இதோ உங்கள் தௌிவுக்கு

தொற்று ஏற்பட்ட நபருடன் 15 நிமிடங்கள் வரை 2 மீற்றருக்கும் குறைவான தூரத்தில் தொடர்பை பேணியிருந்தால் 10 நாட்களுக்கு உங்களை நீங்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தனிமைப்படுத்தலானது குறித்த நபருடன் தொடர்பை பேணிய நாளில் இருந்து கணிக்கப்படுகிறது.
உதாரணமாக நீங்கள் செப்டெம்பர் முதலாம் திகதி உங்கள் நண்பருடன் இணைந்து இரவு உணவு அருந்துகிறீர்கள் அவருக்கு கொவிட் 19 தொற்று இருப்பது அவரை சந்தித்து இரண்டு நாட்களின் பின்னரே உறுதியாகிறது என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறெனில் உங்களுடைய தனிமைப்படுத்தல் காலம் செப்டெம்பர் முதலாம் திகதி ஆரம்பமாகிறது. தொற்றுக்குள்ளான நபரை கடைசியாக தினத்தில் இருந்து தனிமைப்படுத்தல் ஆரம்பமாகிறது.

1. தொற்றுக்குள்ளான நபருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் தனியறையில் 10 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் ஏனையோருக்கு பரவாமல் இருப்பதை உறுதி செய்து, சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும்.

2. தொற்றுக்குள்ளான நபருடன் நீங்கள் நெருங்கிய தொடர்பை பேணியிருப்பின் உங்களை தொடர்புகொண்டு சுகாதார அதிகாரிகள் உங்களுக்கு அறிவிப்பார்கள். அல்லது நீங்கள் 800 342 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறிவிக்க வேண்டும்.

3. தனிமைப்படுத்தப்பட்ட 10 நாட்களுக்குள் எவ்வித அறிகுறியும் காணப்படாவிட்டால் பிசிஆர் பரிசோதனை செய்துக்கொள்ள தேவையில்லை.

 4. தனிமைப்படுத்திக்கொண்ட காலப்பகுதியில் அறிகுறிகள் தென்பட்டால் 800 342 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பிசிஆர் செய்வதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

5 பிசிஆர் பரிசோதனையில் உங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் நீங்கள் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்படுவீர்கள். பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேரெதிராக இருப்பின் 10 நாட்கள் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்ய வேண்டும்.

 

EP 210119591

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image