வௌிநாட்டவருக்கு குடியுரிமை வழங்க டுபாய் அரசு தீர்மானம்

வௌிநாட்டவருக்கு குடியுரிமை வழங்க டுபாய் அரசு தீர்மானம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றங்களை எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று (30) அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வௌிநாடுகளை சேர்ந்த விசேட துறைசார் நிபுணர்களுக்கு குடியுரிமை வழங்க டுபாய் அரச தீர்மானித்துள்ளது.

வௌிநாட்டு முதலீட்டாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் மற்றும் விசேட திறமையுடையவர்கள் டுபாயில் குடியுரிமை பெற தகுதியுடையவர்களாக கருதப்படுகின்றனர்.

விசேட திறமையுடையவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு குடியுரிமை வழங்கும் தீர்மானமானது ஐக்கிய அரபு இராச்சிய சமூகத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்வதையும், நாட்டில் இந்த மக்களின் சமூக ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதையும், ஒட்டுமொத்த தேசிய மேம்பாட்டு செயல்முறையை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

ஜனாதிபதி ஹிஸ் ஹைனஸ் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட இந்த மாற்றங்கள் சனிக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஒப்புதல் அளித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image