முப்பது பேருக்கு அதிகமாக இணைந்தால் 50,000 அபராதம்

முப்பது பேருக்கு அதிகமாக இணைந்தால் 50,000 அபராதம்

வீடுகளில் ஏற்பாடு செய்யப்படும் ஒன்றுகூடல்களில் 30 பேருக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டால் அபராதம் விதிக்கப்படும் என்று டுபாய் அரசு அறிவித்துள்ளது.

30 பேருக்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வை ஏற்பாடு செய்பவருக்கு 50,000 திர்ஹம் அபராதமும் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் 15,000 திர்ஹம் வீதமும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒன்றுகூடல்களை நடத்தும் வீடுகள் ஒருவருக்க 4 சதுர மீற்றர் அளவு இருக்கும் வகையில் இருந்தல் மிக அவசியமாகும்.
டுபாயில் சமூக ஒன்றுகூடல்களுக்கான அனுமதி வழங்கப்பட்டபோதிலும் சுகாதார வழிகாட்டல்கள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொர்பில் அவதானிக்கப்படுகிறது விதிக்கப்படும்.

இதேவேளை, மண்டபங்களில் ஏற்பாடு செய்யப்படும் சமூக ஒன்றுகூடல்களில் 200 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமூக ஒன்றுகூடல்களில் கலந்துகொள்பவர்கள் கைகுழுக்குதல், அணைத்தல் மற்றும் ஏனைய பாரம்பரிய வணக்கம் செலுத்தும் முறைகள் போன்ற அனைத்து உடல் தொடர்புகளை முற்றாக தவிர்க்கவேண்டும். தொடுகையற்ற வணக்கங்களை செலுத்த மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

கலந்துகொள்பவர்கள் அனைவரும் முகக்கவசங்களை தொடர்ந்து பயன்படுத்தவேண்டும். அவரவர் இருப்பிடங்களில் அமர்ந்த பின்னர் மட்டுமே முகக்கவசங்கள் அகற்றப்படவேண்டும். ஒரு மேசையில் ஆகக்கூடியது ஐவர் மட்டுமே அமர முடியும்.
மேலும் முகத்துக்கு முகம் பார்த்து அமர்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் இரு நபர்களுக்கிடையில் 1.5 மீற்றர் தூரம் இருப்பது கட்டாயமாகும். 4 மணி நேரம் மட்டுமே ஒன்றுகூடல்களை நடத்த முடியும். முதியவர்கள் மற்றும் நீண்டகால நோயுள்ளவர்கள் மற்றும் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்கள் அத்தகைய நிகழ்வுகளில் கலந்துகொள்ள ​வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image