ஐக்கிய அரபு இராச்சியம் தொலைவில் இருந்து பணியாற்றுவோருக்கான புதிய விசா முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
துறைசார் நிபுணத்துவம் கொண்டவர்களுக்கு இவ்வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. அவர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் அமீரகத்தில் குடியிருக்க அனுமதிக்கும் வகையில் இவ்வீசா வழங்கப்படவுள்ளது.
இப்புதிய குடிவரவு திட்டத்திற்கு தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். நீங்கள் விண்ணப்பிக்க தகுதியானவரா?
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் டுபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இதனை அறிவித்துள்ளார்.