டுபாய் கடலில் தவறி விழுந்து இரு மணி நேரம் நீந்தி கரையடைந்த நபர்

டுபாய் கடலில் தவறி விழுந்து இரு மணி நேரம் நீந்தி கரையடைந்த நபர்

படகில் சென்று கடலில் மூழ்கிய புலம்பெயர் தொழிலாளர் இரு மணித்தியாலங்கள் போராடி நீந்தி கரை சேர்ந்த சம்பவம் ஒன்று டுபாயில் இடம்பெற்றுள்ளது.

27 வயது இந்தியரான ராஜ்வீர் வகானி என்பவரே இவ்வாறு போராடி கரை சேர்ந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,, நண்பரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு படகொன்றை வாடகைக்கு எடுத்த நண்பர்கள் பின்னேரம் 5.30 மணியளவில் டுபாய் மரீனா பிரதேசத்தில் இருந்து நடுக்கடலுக்கு சென்றுள்ளனர். படகின் மேற்புறத்திற்கு செல்ல திட்டமிட்டு அனைவரும் மேற்புறத்திற்கு சென்றுள்ளனர். இறுதியாக ஏறிய ராஜ்வீர் கால்தவறி கடலுக்குள் விழுந்துள்ளார்.

சத்தமிட்டு கூப்பிட்ட போதும் ஒருவருக்கும் கேட்கவில்லை. 15 நிமிடம் காத்திருந்தபோதும் அவர்கள் சென்ற படகு அவரை காப்பாற்ற அருகில் வரவில்லை. அது வேகமாக சென்று மறைந்தது. படகோட்டுவதற்கு பிரபலமான இடம் என்றபோதிலும் இரவு நேரம் என்பதால் உதவிக்கு ஒருவரும் இருக்கவில்லை. தொலைலவில் பர்ஜ் அல் அராப் ஹோட்டல் கட்டிட வௌிச்சம் தொலைவில் தெரிந்தது. உடனடியாக அவர் அதனை நோக்கி நீந்த ஆரம்பித்துள்ளார். நீந்த முதல் கடிகாரத்தை பார்த்த ராஜ்வீர் இரண்டு மணித்தியாலங்கள் நீந்தி 9.00 மணியளவில் கரையை அடைந்துள்ளார்.

சிறுவயதிலேயே நீச்சல் கற்றிந்தமையினால் ஆபத்தில் அவர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்துள்ளது. ராஜ்வீர் டுபாயில் கணக்காளராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image