புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடல்

புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடல்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உரிமைகளை அதிகரிப்பது குறித்து தூதுவர் ஊடாக கலந்துரையாடலை மேற்கொள்ள தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளொன்றுக்கு குறதது 8 மணி நேர உறக்கம், வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை, கடவுச்சீட்டை பிணைக்கு எடுக்காமை, தொழிலாளருக்கு கைதொலைபேசியை வைத்துக்கொள்ள அனுமதி, தொழிலாளருடைய கணக்கிலகத்திற்கு சம்பளத்தையிடல், தமக்கான உணவை தாமே தயாரித்துக்கொள்ள சந்தர்ப்பம் போன்ற கோரிக்கைள் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள டுபாய், சார்ஜா மற்றும் டுபாய் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image