இலங்கையில் போலி சமூக வலைத்தள கணக்குகள் எவ்வளவு தெரியுமா?

இலங்கையில் போலி சமூக வலைத்தள கணக்குகள் எவ்வளவு தெரியுமா?

உரிமையாளர் அற்ற போலி சமூக வலைத்தளங்களை நீக்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்திருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் போலியான பிரசாரங்களினால் அரசாங்கத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனினும், உரிமையாளருக்கு வலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் தொடர்பில் யார் பொறுப்புக் கூறுவது என்பது குறித்தே பிரச்சினை காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சுமார் 17 சதவீதமான கணக்குகள் உரிமையாளர் அற்றதாக காணப்படுகின்றன. அவுஸ்திரேலியா போன்ற அபிவிருத்தி அடைந்த ஜனநாயக நாடுகளில் கூட இவ்வாறு உரிமையாளர் அற்ற சமூக வலைத்தளங்களுக்கு ஒரு கட்டுப்பாடு இருப்பதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image