இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட - விடுவிக்கப்பட்ட பகுதிகள்

இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட - விடுவிக்கப்பட்ட பகுதிகள்

நாட்டின் பல பகுதிகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் மஹர காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட ஹெட்டிகெஹெல்கல்ல மேற்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டான காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட கே.சி.சில்வா கிராம சேவகர் பிரிவு மற்றும் கதிரான வடக்கு கிராம சேவகர் பிரிவின் அட்டபகஹாவத்த கிராமம், கதிரான தெற்கு கிராம சேவகர் பிரிவின் பேஷகர்ம கிராமம் என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

வத்தளை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட சேதவத்தை கிராம சேவகர் பிரிவின் மஹா பமுனுகம பகுதி,  குன்ஜகஹா வத்தை கிராம சேவகர் பிரிவின் 44ஆம் இலக்க தெரு, நில்சிறிகம கிராம சேவகர் பிரிவின் 3ஆம் மற்றும் 7ஆம் இலக்க தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டி காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட நவமெதகம கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நவமெதகம பகுதி, பக்மிதெனிய கிராம சேவர் பிரிவுக்குட்பட்ட ரன்ஹெலகம பகுதி, சேருபிட்டிய கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட சேருபிட்டிய உப பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினப்புரி மாவட்டத்தின் இரத்தினப்புரி காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட அங்கம்மான கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது,

களுத்துறை மாவட்டத்தின் மொரகஹாஹேன காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட பலன்னொறுவ, கொரலைகம,  கும்புக்க மேற்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஹொரனை காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட நர்த்தனகல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் மொனராகாலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட பொஹிட்டிய கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

இதேவேளை, கம்பஹா, அம்பாறை, குருநாகல், திருகோணமலை மற்றும் களுத்துறை முதலான 5 மாவட்டங்களின் 14 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில், திவுலப்பிட்டி காவல்துறை அதிகார பிரிவில் அஸ்வென்னவத்;த கிழக்கு கிராம சேவகர் பிரிவும், கொட்டதெனியாவ காவல்துறை அதிகார பிரிவில், ஹீரலு கெதர முதலான கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில், தெய்யத்தகண்டி காவல்துறை அதிகார பிரிவில் கதிராபுரம் கிராம சேவகர் பிரிவு, தெய்யத்தகண்டி கிராம சேவகர் பிரிவு சந்தன பகுதி, தெய்யத்தகண்டி கிராம சேவகர் பிரிவு தொலகந்த பிரிவு என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

குருநாகல் மாவட்டத்தில், குமுபுகடே காவல்துறை அதிகார பிரிவில், தித்தவெல்கல மற்றும் நீராவிய முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில், உப்புவெளி காவல்துறை அதிகார பிரிவில் அன்புவழிபுரம் கிராம சேவகர் பிரிவும், திருகோணமலை காவல்துறை அதிகார பிரிவில், உவர்மலை, மட்கோ, லிங்கநகர் முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், சீனக்குடா காவல்துறை அதிகார பிரிவில், சீனக்குடா கிராம சேவகர் பிரிவு லங்காபாலம் மற்றும் தன்யாகம-01, காவட்டிகுடா கிராம சேவகர் பிரிவு சமன்புர, மீன்பிடி கிராமம் மற்றும் தன்யாகம-02 முதலான பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில், பாணந்துறை தெற்கு காவல்துறை அதிகார பிரிவில் நாரம்பிட்டி கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

Isolate.png

 

விடுவிக்கப்பட்ட பகுதிகள்

 

Lifted.png

 

 

 

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image