தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களில் ஊழியர் சேமலாப நிதியப் பிரிவின் சேவைகளை இன்றும் (12), நாளையும் (13) இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகத்தின் ஊழியர் சேமலாப நிதியத்தின் சாதாரண கொடுப்பனவு பிரிவு மாத்திரம் இயங்கும் என தொழில் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகளின் 30 வீதத்தை முற்கூட்டிய கொடுப்பனவாக வழங்கும் பிரிவின் நடவடிக்கை மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசியுங்கள்
தொழில் அமைச்சரிடமிருந்து தொழிலாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவித்தல்
பதிவுசெய்யப்படாத பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் 1,000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும்