சம்பள முரண்பாட்டை தீர்த்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மௌன தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றை அனைத்துப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (02) நன்பகல் 12 மணிக்கு முன்னெடுத்துள்ளனர்.
All Stories
ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் மேலதிகமாக நிதி உள்ளடக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
7 பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி சுகாதார தொழிற்சங்கவியலாளர்கள் நேற்று (01) எதிர்ப்பு வாகன பேரணி ஒன்றை முன்னெடுக்கின்றனர்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொவிட்-19 வகை பிறழ்வான ஒமிக்ரோன் திரிபு தொடர்பான ஏழு முக்கிய காரணிகள் தொடர்பாக ஸ்ரீP ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர வெளிப்படுத்தியுள்ளார்.
பதுளை – ஹாலிஎல பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் அனுமதியின்றி உளநல ஆலோசனை செயலமர்வை நடத்துவதற்கு சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலுள்ள வீடுகள் மற்றும் விற்பனை நிலையங்களில் இருந்து பதிவாகிவரும் சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) வெடிப்பு மற்றும் தீப்பற்றல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவும் அவை தொடர்பில் உடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்வைப்பதற்காகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால், குழுவொன்று நியமிக்கப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள் குறைந்து காணப்படுவதனால் சுகாதார பிரிவுகளை கடந்து பயணிகள் நாட்டுக்குள் நுழைய முடியும் என்றும் இதனால் ஆப்பிரிக்காவில் தற்போது அடையாளங்காணப்பட்டுள்ள அபாயகரமான புதிய கொவிட் 19 திரிபுகள் நாட்டுக்குள் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
வடக்கு, கிழக்கில், மலையகப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் காணப்படும் அதிபர், ஆசிரியர் பற்றாக்குறைகளுக்கு முடிவுக்கான வேண்டும். இதன் மூலமே தேசியப் பாடசாலைகளில் முன்னேற்றம் கொண்டுவர முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் வலியுறுத்தினார்.
2022ஆம் ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது தொடர்பான அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் - அதிபர் சேவையை மூடிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் (CTSU) அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் வலியுறுத்துகிறது.
அடுத்த இரண்டு வருடங்களுக்குள் பயிரிடப்படாத அனைத்து அரச காணிகளிலும் தேயிலை செய்கையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.