பல்வேறு கோரிக்கைகளளை முன்வைத்து ஆர்ப்பாட்டமொன்றை நாளை (11) முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆயுர்வேத வைத்தியசேவையில் தாக்கம் செலுத்தும் பல பிரச்சினைகளை 6 கோரிக்கைகளை முன்வைத்து நாளை நன்பகல் 12 மணிக்கு ராஜகிரிய ஆயுர்வேத தேசிய வைத்தியசாலை முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஆயுர்வேத வைத்திய சேவைக்காக 6 மணிநேர சேவை நேரத்தை வழங்கல், வைத்தியர்களுக்கான கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளல், 10,000 ரூபாவால் சம்பளத்தை அதிகரித்தல், வேலையற்ற ஆயுர்வேத வைத்தியர்களுக்கு தொழில்வாய்ப்பினை வழங்கல், தொழில்யாப்பில் திருத்தங்களை மேற்கொள்ளல், இடமாற்றல் சபை தாதமங்களை நிறுத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் வைத்தியர் கே.பி.ஆர். எஸ் குணரத்ன தெரிவித்துள்ளார்.