பயிலுனர் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நிமயனம்: வயது கட்டுப்பாட்டை நீக்க கோரிக்கை
பாடசாலைக்கு ஆட்சேர்க்கப்பட்டுள்ள பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும்போது வயது கட்டுப்பாட்டை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
சூரியவெவ நகரில் நேற்று (10) இடம்பெற்ற போராட்டத்தின்போது பட்டதாரி பயிலுனர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஓராண்டுகால பயிற்சி வரையறைக்குள் ஆட்சேர்க்கப்பட்ட எங்களை, தற்போது வரையில் ஓர் ஆண்டும் இரண்டு மாதங்களுக்கும் அதிக பயிற்சி காலம் நிறைவடைந்த பின்னரும் தொடர்ச்சியாக அவ்வாறே வைத்துள்ளனர்.
அதுமாத்திரமன்றி குறிப்பாக பாடசாலைகளுக்கு ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுள் தற்போது பாடசாலைக்கு ஆட்சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக 35 வயது என்ற வரையறை கொண்டுவரப்பட்டுள்ளது.
35 வயது என்ற வரையறை கொண்டுவரப்படுவதற்கு முன்னால் அரசாங்கம் எந்த ஒரு வரையறையும் இன்றியே பாடசாலைக்கு ஆட்சேர்த்தது. இந்தநிலையில் ஆட்சேர்ப்பு எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்காக 35வயது என்ற வரையறையை கொண்டு வந்துள்ளது.
எனவே, இந்த வயது கட்டுப்பாட்டை நீக்கி தற்போது வரையில் பாடசாலைசாலைக்காக பயிற்சி பெற்றுக்கொண்டுள்ள அனைத்து பயிலுனர் பட்டதாரிகளுக்கும் தங்களது விருப்பத்தின்பேரில் பாடசாலைக்கு ஆட்சியருக்குமாறு நினைவுபடுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.