பல தொழிற்சங்கங்களுடன் கொழும்பில் போராட்டம் நடத்திய ஆசிரியர் அதிபர்கள்
நாடளாவிய ரீதியில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த தேசிய எதிர்ப்பு போராட்டத்தின் பிரதான போராட்டம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது
லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று பிற்பகல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
"ஆசிரியர் அதிபர் வேதனப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்கு", "பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்" என்பன இந்த போராட்டத்தின் பிரதான கோரிக்கைகளாக அமைந்துள்ளன
அத்துடன், "அனைத்து ஊழியர்களுக்கும் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கு" "வாழ்க்கைச் செலவு சுமையை குறைக்க வேண்டும்!" "விவசாயிகளுக்கு உரிய உரத்தை வழங்க வேண்டும்!" முதலான கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தேசிய எதிர்ப்பு தின போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.
ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களுக்கு மேலதிகமாக பல்வேறு துறைசார் தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிலாளர் போராட்டம் மத்திய நிலையம், பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மத்திய நிலையம் உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.