ஆசிரியர் - அதிபர் சம்பளப் பிரச்சினைக்கு ஒரே கட்டத்தில் தீர்வு  

ஆசிரியர் - அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

அமைச்சரவை உபகுழுவின் யோசனையை முழுமையாக அடுல்படுத்த இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

சம்பளப் பிரச்சினைக்கு மூன்று கட்டங்களில் அல்லாமல் ஒரே கட்டத்தில் தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்கள், 120 நாட்களுக்கும் அதிக நாட்களாக தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

இந்த நிலையில், இன்று பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்வு வழங்க இணங்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image