பயிலுநர் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கு புதிய திட்டம்!
எதிர்வரும் வருடம் நிறைவடைவதற்குள் அனைத்துப் பட்டதாரிகளுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயிலுநர்களாக கல்வியமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்காக தேசிய கல்வி நிறுவகத்தினூடாக பட்ட மேல் டிப்ளோமா கற்றலை நிகழ்நிலை மற்றும் வாரஇறுதி கற்றலாக கற்பதற்கான வாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுதற்ள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விரைவில் நியமிக்கப்பட்டுள்ள உபகுழுவினரை சந்தித்து பல சந்திப்புகளை மேற்கொண்டு குறித்த விடயம் தொடர்பில் வேலைத்திட்டமொன்றை விரைவில் ஆரம்பிக்க எண்ணியுள்ளோம். அப்போது அடுத்த வரு நிறைவுக்குள் அனைத்து பட்டதாரிகளைக்கும் நிரந்தர நியமனம் வழங்க முடியுமாகும். ஏற்கனவே கல்வித்துறைக்குள் உள்வாங்கப்பட்டுள்ள 18,000 பட்டதாரிகளுக்கு மேலதிகமாக மேலும் ஒரு தொகுதி பட்டதாரிகள் சேவைக்குள் உள்வாங்கப்படுவார்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.