அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் மாதாந்த பங்களிப்புடன் மிகவும் கவர்ச்சிகரமான சலுகைகளை அனுபவிக்கும் வகையில்இ 2025 ஜனவரி முதல் மருத்துவக் காப்புறுதி முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.