நாடுதழுவிய ரீதியில் நாளை (06) முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு (நிர்வாக முடக்கல்) ஆததரவளிப்பதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
All Stories
மக்கள் போராட்டத்தில் பிராந்திய சமூக ஆர்வலர்களை வேட்டையாடும் காவல்துறையின் முயற்சியை முறியடிப்போம் என சுதந்திர ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தற்போதைய அராசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள செயற்பாட்டாளர்களை பொலிசார் கைது செய்து அச்சுறுத்திய இரண்டு சம்பவங்கள் தொடர்பாகச் சுதந்திர ஊடகம் இயக்கம் தனது கவனத்தை செலுத்தியுள்ளதுடன் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டாமெனப் பொலிஸ்மா அதிபர் மற்றும் அரசாங்கத்திடம் வேண்டிக்கொள்கின்றது.
இது குறித்து சுதந்திர ஊடகவியலாளர் சங்கம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
15 வருடங்களாக ராஜபக்ஸவினருடன் வைத்திருந்த தொடர்புகள் இன்றுடன் முடிவுக்கு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 6ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் அரசுக்கெதிராக கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 6ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பில் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தரம் குறித்து ஏதேனும் சந்தேகம் காணப்படுமாயின் அது தொடர்பில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிப்பதற்காக இரு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களை, ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்பதற்கான நியமனக் கடிதங்கள் இன்று வழங்கப்படவுள்ளன.
அரசாங்க சேவை ஆணைக்குழுவின் நியமன அதிகாரத்தின் கீழ் இணைந்து சேவைகளின் பதவிகளில் பதில் கடமை பணிபுரிவதற்கான நியமனங்கள் தொடர்பான அறிவித்தலை பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இன்று வழமைபோன்று சேவைகள் இடம்பெறும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டாதிருப்பின் எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை கடமைகளுக்கு போதிய எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சமூகமளிக்க மாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் காலி முகத்திடல் போராட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி போராட்டம் இடம்பெற்றது.