மே 06 ஹர்த்தால் தொடர்பில் பட்டதாரிகள் - அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அறிவிப்பு
எதிர்வரும் 6ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பில் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நியமனம் பெற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரியஆராச்சி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சுக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று நாட்டில் பாரிய பிரச்சினை ஏற்பட்டு இருக்கின்றது. திறைசேரியில் பணம் இல்லை. பொருட்களின் விலை அதிகரித்திருக்கின்றது. பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் பொருட்களைக் கொள்னவனவு செய்ய பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவ்வாறு பல பிரச்சினைகள் இருக்கின்றன. மக்கள் வாழ்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்திருக்கின்றது. இலங்கை ரூபாவின் பெறுமதி உலகில் பெறுமதி குறைந்த பணமாகியுள்ளது. நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதேநேரம் நாட்டின் தேசிய வளங்கள் பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் காணிகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் உணவுப்பொருட்கள், கேஸ் சிலிண்டர்கள், எரிபொருள் என்பவற்றை பெற்றுக் கொள்ளுதல், மாணவர்களுக்கான கல்வி செலவுக்காக மாதம் செலவிடப்பட வேண்டிய பணம் உள்ளிட்ட அனைத்தும் இன்று அதிகரித்துள்ளன. இது தொழிலாளர் வர்க்கத்தை மிகவும் பாதித்துள்ளது.
இந்த நிலையில் அதற்கான மக்கள் கருத்தாடலை ஏற்படுத்துவதற்காக சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும், மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையிலும் வேலை செய்யும் தொழிலாளர் வர்க்கத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு மத்தியில் மே மாதம் 6ஆம் திகதி நாடு முழுவதும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள ஹர்த்தால் (நிர்வாக முடக்கம்) தொடர்பில் அரச மற்றும் மாகாண அரச சேவையில் MN-4 2006 A சம்பள தரத்திற்கு கீழே உள்ள பட்டதாரிகள் உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மே மாதம் 6ஆம் திகதி சேவைக்கு சமூகமளிப்பதிலிருந்து விலகி தொழற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார்கள் என இதன்மூலம் அறியப்படுத்துகின்றேன். - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு இன்று நிமயனம்
ஆசிரியர் - அதிபர்களின் பரீட்சை கடமைக் கொடுப்பனவு பற்றிய அறிவித்தல்