அரசுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டங்களில் ஆசிரியர் விடுதலை முன்னணி

அரசுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டங்களில் ஆசிரியர் விடுதலை முன்னணி

எதிர்வரும் 6ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் அரசுக்கெதிராக கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் விடுதலை முன்னணி ஏனைய ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அனைத்து ஆசிரியர்களும் ஒன்றிணைந்து எரிபொருள் விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் என்பவற்றைக் கண்டித்து இந்த மாபெரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என என்.டி.எஸ்.நாதன் தெரிவித்தார்.

மேலும், நுவரெலியா, தலவாக்கலை, கொட்டக்கலை, டயகம, ஹோல்புறூக், ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, பொகவந்தலாவ, கினிகத்தேன, வலப்பனை, ஹங்குரங்கெத்த மற்றும் கொத்மலை ஆகிய நகரங்களில் ஆசிரியர் விடுதலை முன்னணி ஏனைய ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டங்களிலும் ஆர்ப்பாட்ட பேரணிகளிலும் ஈடுப்படவுள்ளது. 

இந்த அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்கும் வரை எமது போராட்டங்கள் ஓய்வதில்லை என்றார். 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image