ஆசிரியர் - அதிபர்களின் பரீட்சை கடமைக் கொடுப்பனவு பற்றிய அறிவித்தல்

ஆசிரியர் - அதிபர்களின் பரீட்சை கடமைக் கொடுப்பனவு பற்றிய அறிவித்தல்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டாதிருப்பின் எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை கடமைகளுக்கு போதிய எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சமூகமளிக்க மாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் பிரியந்த பெர்ணான்டோ,

சாதாரண தர பரீட்சை மே மாதம் நடத்த வேண்டும் என்று நாங்களும் கருதுகிறோம். ஆனால் ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு பரிட்சை கடமைகளுக்காக வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்படவேண்டும். ஒரு ஆசிரியருக்கான சராசரி ஊதியம் 1200 ரூபாவும், ஒரு அதிபருக்கு 2,800 ரூபாவுமே வழங்கப்படுகிறது. இது போதாது. கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டாவிட்டால் பரீட்டைச் கடமைகளுக்கு வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையும்.

பரீட்சை கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தமது தனிப்பட்ட வாகனங்களை இதற்காக பயன்படுத்துவதாக குறிப்பிட்ட அவர் வேகமாக அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இவர்களது கொடுப்பனவு எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு கூட போதுமானதாக இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இவ்வாறான சிரமங்களுக்கு மத்தியில் ஆசிரியர்களும் அதிபர்களும் பரீட்டைக் கடமைகளில் ஈடுபட விரும்பவில்லை. மேலும் நாங்கள் பரீட்சை கடமைகளுக்கு செல்ல வேண்டியதில்லை. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் பரீட்சையின் போது ஆசிரியர்களும் அதிபர்களும் இந்த பணிகளில் இருந்து விலகிக் கொள்வார்கள் என பெர்னாண்டோ தெரிவித்தார்.

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன பரீட்சை மே மாதம் 23 முதல் ஜூன் 1 வரை நடைபெறும் என தெரிவித்தார. மே 20-ஆம் திகதிக்குள் அனைத்து மாகாண கல்வி ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு மையங்களுக்கும் பரீட்சை வினாத்தாள்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மூலம் - டெக்மோர்

 மேலும் செய்திகள்

எரிபொருள் தரம் தொடர்பான சந்தேகங்களை அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள்

முகாமைத்துவ சேவை: பதிற் கடமை புரிவதற்கான நியமனங்கள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image