அரசியல் கட்சிகளின் தலையீடுகளின்றி காலிமுகத்திடலில் மே தினக் கூட்டம்
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் காலி முகத்திடல் போராட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி போராட்டம் இடம்பெற்றது.
கருப்பு கொடிகளை ஏற்றி , செந்நிற ஆடையணிந்து அரசியல் தலையீடுகள் இன்றி இங்கு மேதினக் கூட்டம் இடம்பெற்றது.
அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இன்றி தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் காலிமுகத்திடலில் இந்த மேதின பேரணியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நேற்று 23 ஆவது நாளாகவும் தொடர்ந்தது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர் யுவதிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் நேற்றைய தினம் மே தின போராட்டத்திலும் பேரணியில் ஈடுபட்டனர்.
'மக்கள் கருத்துக்கு தலை வணங்கு அரசாங்கமே வீட்டுக்கு போ' – ப்ரொடெக்ட்