பாடசாலைகளில் மாணவர் விழிப்புணர்வு செயல்திட்டம்

பாடசாலைகளில் மாணவர் விழிப்புணர்வு செயல்திட்டம்

சகல அரசாங்க பாடசாலைகளிலும் பிரதி புதன்கிழமைகளில் காலை 10 நிமிடங்கள் மாணவர் விழிப்புணர்வு செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை தொடர்பான சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சு சகல மாகாண வலய கல்வி பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

முதல் 12 புதன்கிழமைகளில் காலை 7.30 மணிமுதல் 7.40 மணி வரை இப் புதிய விழிப்புணர்வு செயற்திட்டம் இடம்பெறும்.

பத்து நிமிடங்களைக் கொண்டதாக "நிலையான தன்மையில் அமர்த்தல்" என்ற தொனிப் பொருளில் இந்த வேலைத்திட்டம் 12 புதன்கிழமைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் விழுமியங்கள் மற்றும் பண்புசார் விருத்தி தொடர்பாக இப் புதிய விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நிலையான தன்மையில் அமரச் செய்தல் என்ற இந் நிகழ்வில் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுள்ளது..

மூலம் - நியூஸ்.எல்கே

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image