அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சுகாதாரத் துறையைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றன.
All Stories
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தாமதமாகுவதால், பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் ஏனைய பரீட்சைகளும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரமே அரசாங்கத்தை மாற்ற முடியும் என்றும் வீதிகள் அதற்கு மாற்றுவழியல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
நேற்று (28) இரவு கிரேக்க நகரமான லாரிசா அருகே இரண்டு ரயில்கள் மோதியதில் சுமார் 32 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 85 பேர் வரை காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசாங்கத்தின் கீழ் உள்ள 100க்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்கள், முகவரகங்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்களின் சேவைகள் தேவைப்படாத நிலையில், அவற்றின் செயற்பாடுகளை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் அரச அச்சகர் உள்ளிட்ட அதிகாரிகளை மீண்டும் ஆணைக்குழுவிற்கு அழைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படும் அடையாள பணிப்புறக்கணிப்பு வெற்றிகரமாக இடம்பெறுவதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 3000க்கும் மேற்பட்ட அரச பணியாளருக்கு தம்மால் நிவாரணம் வழங்க முடியாது தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களுக்கு தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் ஊழியர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை நீக்காவிடின் வருகிற வாரம் அனைத்து அரச ஊழியர்களும் இணைந்து பாரிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கொடுப்பனவை வழங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, துறைமுகம், மின்சாரம், எரிபொருள், மருத்துவம் மற்றும் வங்கித்துறை உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஈடுபடும் 40 தொழிற்சங்கங்கள், இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.