பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் எதிர்ப்பு

பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் எதிர்ப்பு

பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் எதிர்ப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.



நியாயமற்ற வரி கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுகாதாரம், மின்சாரம், துறைமுகம், பெட்ரோலியம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உள்ளிட்ட 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன.

பிரதான எதிர்ப்பு பேரணி கொழும்பு - ஹைட்பார்க்கில் முன்னெடுக்கப்படவுள்ளது.

தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவளித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இன்று காலை 8 மணிமுதல், நாளை காலை 8 மணிவரை, 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கிறது.

எனினும், குழந்தைகள், மகப்பேறு மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகள் உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நீர், மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று கொழும்பு கோட்டையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image