அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படும் அடையாள பணிப்புறக்கணிப்பு வெற்றிகரமாக இடம்பெறுவதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
துறைமுக தொழிற்சங்க உறுப்பினர்களால், இன்று காலை 7 மணிமுதல் ஆரம்பிக்கப்பட்ட சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை நாளை காலை 7 மணிவரை தொடரும் என அந்த சங்கத்தின் தலைவர் நிரோஷன் கொரகான தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கையால், இன்று துறைமுகத்துக்கு வரவிருந்த 8 கப்பல்கள் தாமதமடைந்துள்ளன.
இன்றைய நாளின் இறுதியில், துறைமுத்திற்கு கிடைக்கவிருந்த சுமார் 10 கோடி ரூபா இல்லாமல்போகிறது.
எனவே, துறைமுக சேவைகளைப் பெற்றுக்கொள்ள உள்ள வர்த்தகர்கள், இன்றைய தினத்தை தவிர்த்து நாளைய தினம் சேவையைப பெற்றுக்கொள்ள வருமாறு அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் நிரோஷன் கொரகான தெரிவித்துள்ளார்.