கடந்த ஆண்டு அரை மில்லியன் இலங்கையர்கள் வேலையிழப்பு - உலக வங்கி
கடந்த 2022 இல் சுமார் அரை மில்லியன் இலங்கையர்கள் தொழிலை இழந்துள்னர் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
அவ்வாறு தொழிலை இழந்தவர்கள் பெண்கள் என்றும் பெரும்பாலும் தொழிற்சாலைகள் மற்றும் சேவைத் துறையில் பணியாற்றிய பெண்களே தொழிலை இழந்துள்ளனர் என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்தவர்களின் வாழ்க்கைச் செலவு 65 வீதமாக அதிகரித்துள்ள நிலையில் ஓரளவு வசதிப் படைத்தவர்களின் வாழ்க்கைச் செலவு 57 வீதமாக அதிகரித்துள்ளது என உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியங்களுக்கான உப தலைவர் ரேய்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையானது இலங்கையர்கள் குறிப்பிடத்தக்க அளவு நலன்புரியை இழந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் இந்நிலை தொடர்பில் அவர் எழுத்திய கட்டுரையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு நீண்ட கால தவறான பொருளாதார நிருவாகம், பலவீனமான நிருவாகம், மோசமான கொள்கை தேர்வுகள் மற்றும் வௌிப்புறத் தாக்கங்களான கொவிட் 19 தொற்று மற்றும் ரஷ்யாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்கள் தாக்கம் செலுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நெருக்கடியின் ஆழம் இலங்கைக்கு புதிய அபிவிருத்தி மாதிரி தேவை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. எவ்வாறாயினும், மீட்புக்கான பாதை சவால் மிக்கதானதாக இருக்கும். அத்துடன் தேவையான நிதி சரிசெய்தல் நடவடிக்கைகள் வலிமிகுந்ததாக இருக்கும் என்றும் ரேய்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன் பெற்றோருக்கான கடன் நிவாரணம், சர்வதேச நிதி நிறுவனங்களின் புதிய நிதியுதவி ஆகியவை சீர்திருத்தங்களில் மக்கள் பொறுமையை இழக்காமல் இருப்பதையும் மாற்றத்திற்கான வாய்ப்பை இழக்காமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவது மிகவும் அவசரமும் அவசியமுமானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.