வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு

வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு

வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, துறைமுகம், மின்சாரம், எரிபொருள், மருத்துவம் மற்றும் வங்கித்துறை உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஈடுபடும் 40 தொழிற்சங்கங்கள், இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.



ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக வருமானம் பெறும் தொழில் வல்லுநர்களிடமிருந்து 06 வீதம் முதல் 36 வீதம் வரை வரி அறவிடப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

புதிய வரித் திருத்தத்தை மறுசீரமைப்பிற்கு உட்படுத்துமாறு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி தமது கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அரசாங்கத்தால் அதற்கு உரிய பதில் வழங்கப்படவில்லை.

இது தொடர்பில் தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போதிலும் அந்த கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்திருந்தது.

இன்றைய தினம் (01), 12 இடங்களில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சுமார் 40 தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று தீர்மானித்தது.

எனினும், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை, ரிஜ்வே சிறுவர் சீமாட்டி வைத்தியசாலை, காசல் வைத்தியசாலை, சிறுநீரக நோய் வைத்தியசாலை உள்ளிட்ட சில வைத்தியசாலைகளில் இந்தப் பணிப்புறக்கணிப்பு இடம்பெறாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image