சுகாதார துறைசார் பல தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு

சுகாதார துறைசார் பல தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சுகாதாரத் துறையைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றன.



இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த பணிப் புறக்கணிப்பு காரணமாக, வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, மருத்துவ ஆய்வகப் பிரிவு  உள்ளிட்ட ஏனைய சேவைகள் பாதிக்கப்படலாம் என அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் பி. திலகரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சுகாதார செயலாளர், சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுடன் நேற்று நடத்திய கலந்துரையாடலில், சாதகமான பதில் கிடைக்காமையால், இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் பி. திலகரத்ன தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றைய பணிப்புறக்கணிப்பில் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட 40 தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க ஒன்றியம் நேற்று கலந்துரையாடியது.

இதன்போது, நாளைய தினம் முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image