பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்- GMOA

பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்- GMOA

நாளை (01) முன்னெடுக்கவுள்ள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (28) எட்டப்படும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று காலை மேற்படி விடயம் தொடர்பான தீர்மானம் எடுக்கும் அவசர சந்திப்பு இடம்பெறவுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அரசின் வரிக்கொள்கை உட்பட பல விடயங்கள் தொடர்பில் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நாளை (01) பாரிய பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கு துறைமுகம், பெற்றோலியம், மின்சாரம், வங்கி உட்பட பல துறைச்சார் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளது.

 இப்போராட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கி ஊழியர்களும் இணைந்துள்ளமை விசேட விடயமாகும்.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அத்தியவசிய சேவைகளை வழங்க முடியாமல் போகின்றமையினால் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், துறைமுகம், விமானசேவை, போக்குவரத்து உட்பட பல சேவைகளை உடனுக்கு அமுலுக்கு வரும் வகையில் அத்தியவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image