வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, துறைமுகம், மின்சாரம், எரிபொருள், மருத்துவம் மற்றும் வங்கித்துறை உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஈடுபடும் 40 தொழிற்சங்கங்கள், இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.
புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றைய தினம், மத்திய வங்கி ஊழியர்களும், அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்களும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
இதன் காரணமாக, அரச மற்றும் தனியார் துறை வங்கிகளின் சேவைகள், முடங்கக்கூடும் என வங்கித்துறைசார் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறிருப்பினும், உச்சபட்ச சேவையை வழங்கும் நோக்குவதற்கு, தமது வங்கி தயாராக உள்ளதென மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் தலைவர்கள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.