GMOA தலைவர் சுயதனிமைப்படுத்தலில்

GMOA தலைவர் சுயதனிமைப்படுத்தலில்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவரின் வீட்டில் கடந்த தினம் இடம்பெற்ற இரவு விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட வைத்தியர் ஒருவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதை அடுத்து, அவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் நேற்று (14) கருத்து தெரிவித்துள்ள விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய, எனது சிகிச்சை விடுதியில் வைத்தியர் ஒருவர் இடமாற்றம் பெற்று செல்வதனால், நான் விசேட வைத்தியர் என்ற அடிப்படையில் விருந்துபசாரம் வழங்கும் சம்பிரதாயம் ஒன்றுள்ளது.

கொரோனா நிலைமை காரணமாக எனது வீட்டில் வைத்து அவருக்கு விருந்து வழங்கப்பட்டது. அந்த வைத்தியருடன் நான் சேவையாற்றுகின்றமையால், அவருக்கு தொற்று ஏற்பட்டால், நான் தொடர்பாளராகுவது புதிய விடயம் அல்ல. நாம் ஒரே குழுவினராவோம்.

இந்த நிலையில், குறித்த வைத்தியருக்கு நேற்று (நேற்று முன்தினம்) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுறுதியானது. எனினும், இதனை நான் அறிந்திருக்கவில்லை.

இதையடுத்து, நேற்று (நேற்று முன்தினம்) பொதுசுகாதார அதிகாரி எனது வீட்டுக்கு வந்துள்ளார். எனக்கு அறிவிக்கப்படாமல் அவர் வந்திருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் நான் வீட்டில் இருக்கவில்லை. இதை அறிந்ததன் பின்னர், அவரை நான் தொடர்புகொண்டபோது, இன்று அல்லது நாளை எனக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்தார்.

எனக்கு எவ்வித நோய் அறிகுறியும் இல்லை. பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் வரையில் நான் வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் இருப்பேன் - என வைத்தியர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image