தொழிலாளர்களுக்கான நட்டஈட்டை தீர்மானிக்க சூத்திரம்

தொழிலாளர்களுக்கான நட்டஈட்டை தீர்மானிக்க சூத்திரம்

தொழிலாளர்களின் சேவையை முடிவுறுத்தும் போது அவர்களுக்கு செலுத்த வேண்டிய நட்டஈட்டுத் தொகை தீர்மானிப்பதற்கான சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய தொழில் உறவுகள் அமைச்சரால் கொண்டுவரப்பட்ட ஒழுங்குவிதிகளை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர்கள் பணிபுரிந்த காலத்தை கருத்தில் கொண்டு நட்டஈடு தீர்மானிக்கப்படும்.

அவ்வாறாயினும் குறித்த சூத்திரத்துக்கமைய கணிப்பிடும் போது ரூபா 1,250, 000 இற்க அதிகரிக்கப்படாத ஏற்பாட்டுக்கு குறித்த ஒழுங்குவிதிகளில் உள்வாங்கப்பட்டிருப்பதால் நியாயமற்ற வகையில் தொழிலாளர்கள் பணியிலிருந்து நீக்கப்படும் போதும் நிறுவனம் மூடப்பபடுவதால் தொழிலை இழக்கும் போதும் உயர் சம்பளத்தை பெறும் பணியாளர்களுக்கு கிடைக்கும் நட்டஈடு குறைவாக இருக்கின்றமை தெரியவந்துள்ளது.

குறித்த விடயத்தை கவனத்தில் கொண்டு செலுத்தப்படவேண்டிய உயர்ந்தபட்ச நட்டஈட்டுத் தொகையை ரூபா 1,250,000 இலிருந்து ரூபா 2,500,000 தொழில் உறவுகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image