ஊழியர் சேமலாப நிதியத்தை பெறல் மற்றும் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை கையளிப்பதற்கு கொழும்பு நாராஹேண்பிட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்திற்கு வருகைத் தர வேண்டாம் என்று தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
All Stories
தொழிலாளர் திணைக்களத்தில் பிரதான 3 பிரிவுகளில் பல ஊழியர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடுமையான சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திணைக்கள ஊழியர்களுக்கு செய்யப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அதன் பின்னர் செய்யப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வருவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளமையினால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்க அங்கத்தவர் ஒருவர் எமது இணையதளத்திற்கு தெரிவித்துள்ளார்.
மேற்கு கொழும்பு தொழிலாளர் அலுவலகத்தில் சாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள ஊழியர்கள் பாரிய சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனினும் அவ்வலுவலகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தொழில் ஆணையாளர் அனுமதி வழங்கவில்லை என்றும் அத்தொழிற்சங்க செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
இது தவிர 8வது மாடியில் உள்ள கொடுப்பனவு பிரிவில் அலுவலக உதவியாளர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள அதிகாரிகள் தற்போது உரிய சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதிலும் அலுவலகத்தின் ஏனைய அதிகாரிகள் வழமைப் போல தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர.
தொற்று ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் அதிகாரிகளையும் ஊழியர்களையும் பாதுகாப்பதற்கான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காத நிலை தற்போது காணப்படுகிறது. எவ்வளவு ஆபத்தான நிலையிலும் ஊழியர்கள் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பணிப்பாளர் நாயகம் உள்ளார். அவருடைய நோக்கம் எத்தகைய பிரச்சினையான சூழ்நிலையிலும் திணைக்களம் இயங்கி வருகிறது என்றுகாட்டி நற்பெயரை சம்பாதித்துக்கொள்வதாகும். இதற்கு முன்னர் கரையோர அபிவிருத்தி திணைக்களத்தில் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் அரச நிதியை நாசமாக்கியமைக்கு கருப்புப் புள்ளி பெற்றவர் என்பதனால் ஊழியர்களை ஆபத்தில் வைத்து இந்த சந்தர்ப்பத்தை நற்பெயருக்கு பயன்படுத்த முயல்கிறார் என்றும் அத்தொழிற்சங்க செயற்பாட்டாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்
சேவை பெற வரும் பொதுமக்களுக்கு கை கழுவுதல் உட்பட ஏனைய சேவைகள் ஒழுங்காக முன்னெடுக்கப்படவதில்லை. பாதுகாப்புச் சேவையும் இது தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. தொற்று முதன்முதலில் பாதுகாப்பு சேவையில் பணியாற்றியவர்களுக்கே ஏற்பட்டது. எனினும் அவர்கள் தமது கடமையை ஒழுங்காக செய்வதில்லை.
எது எவ்வாறு இருப்பினும் பணிப்பாளர் நாயகத்தின் செயற்பாடுகளினால் அதிகாரிகள் உட்பட அனைத்து ஊழியர்கள் மற்றும் சேவை பெற வரும் பொது மக்கள் என அனைவரும் கொரோனா அபாயத்தை எதிர்நோக்க வேண்டியேற்பட்டுள்ளது என்றும் அத்தொழிற்சங்க செயற்பாட்டாளர் விசனம் தெரிவித்தார்.
நேற்றைய தினம் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் பரவலடையும் கெப்ரி பொக்ஸ் எனப்படும் வைரஸ் வகையை சேர்ந்த கால்நடைகளுக்கு பரவும் ஒருவித நோய் காரணமாக பால் உற்பத்தியாளர்கள் தற்போது பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இன்று இடம்பெற்ற கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையும் எவ்வித இணக்கப்பாடுமின்றி முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கான திகதி குறிப்பிடப்படாமலேயே இன்றைய பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது.
கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை தொழில் அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா தலைமையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்றைய தினம், தொழிற்சங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் தொழில் அமைச்சில் இடம்பெற்றது. தொழில் அமைச்சின் பிரதிநிதிகளும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர்.
முன்னதாக இடம்பெற்ற நான்கு சுற்று பேச்சுவார்த்தையில் இறுதி இணனக்கப்பாடு எட்டப்படாத நிலையில், இன்றைய தினம், ஐந்தாம் சுற்று பேச்சு வார்த்தையில் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்ற போதிலும் இறுதி இணக்கபாடு எட்டப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும், 25 நாட்கள் வேலை அவசியம் என வலியுறுத்தி மஸ்கெலியா நகரில் இன்று (06) முற்பகல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அனைத்தையும் அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக பொறுப்பேற்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு டிப்ளோமாதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் 2020 கீழ் மேன்முறையீடுகளை கவனத்தில் எடுத்தல் - 03 ஆம் திட்டத்தின் கீழ், பட்டதாரி பயிலுனர் நியமனம் கிடைக்காமை தொடர்பில் மேன்முறையீடுகளை சமர்ப்பித்த விண்ணப்பதாரிகளில் தகைமை பெற்ற விண்ணப்பதாரர்களின் மாவட்ட வாரியான பெயர் பட்டியலை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் உள்ளூர் அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல் கீழே உள்ள இணைப்பில்...
மாவட்ட ரீதியிலான பெயர் பட்டியல் விபரத்தை பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும்....
விமானப்படை வீரர்கள் பாடசாலை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆகக்குறைந்த நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான மாற்று யோசனையை, எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 வைரஸ் நோய்க்கு சிகிச்சையளிக்க இந்தியா தயாரிக்கும் தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கு வழங்கும் போது இலங்கைக்கு முன்னுரிமை அளிக்க தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.
அரசாங்கம் சார்பாக தீர்மானங்களை எடுப்போர் தமது பொறுப்பில் உள்ள பொது உடைமைகளை அதன் உண்மையான உரிமையாளர்களான நாட்டின் பிரஜைகளிடம் கேட்டறியாமல் வேறு தரப்பினருக்கு வழங்குவது அரசியலமைப்பை மீறும் செயல் என தேசிய ஒன்றிணைந்த குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.