பட்டதாரி பயிலுநர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கும் சாத்தியம்

பட்டதாரி பயிலுநர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கும் சாத்தியம்

பொது சேவைகள் மற்றும் மாகாண பொதுசேவைகளுக்காக அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுநர்களுக்கு பயிற்சி காலத்தில் வழங்கப்படும் 20,000 கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அபிவிருத்தி அதிகாரிகள் சங்கத்தினால் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பட்டதாரி பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான 12 மாதங்களில் ஒரு மாதத்திற்கான கொடுப்பனவு 20,000 ரூபா வழங்கப்படுகிறது.

தற்போது நாட்டில் காணப்படும் வாழ்க்கைச்செலவுக்கு இக்கொடுப்பனவு போதியனவாக இல்லை. அத்துடன் கொவிட் 19 பரவல் காரணமாக விசேட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. இவ்விடயங்களை கவனத்திற்ககொண்டு குறித்த கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஒரு கிராமசேவகர் பிரிவில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 13.12.2020 காலப்பகுதியில் நிறைவு செய்யவேண்டியிருந்தமையினால் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக கடமையாற்றினர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1. குறித்த திட்டத்தை நிறைவு செய்வதற்கு வார இறுதிநாட்கள், பொது விடுமுறைகள் என கவனத்திற்கொள்ளாமல் கடமையினை முன்னெடுத்தனர்.

2. இதற்கு முன்னர் கம்பெரலிய திட்டத்திற்கு உரிய சுதேச அலுவல்கள் அமைச்சினால் வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கமைய குறித்த விடுமுறைகளுக்கு ஒரு மாதத்திற்கு வழங்கக்கூடிய அதிகூடிய விடுமுறை கொடுப்பனவை நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு பெற்றுக்கொடுத்தல்

 3. அதன்படி, ஒரு மாதத்திற்கு ஒரு களத்தில் நிரந்தர கடமையில் இருக்கும் அதிகாரிகளுக்கு அதிகபட்சம் 03 நாட்களும், சம்பந்தப்பட்ட அதிகாரி வேறொரு களத்தில் கடமையில் இருந்தால், அவருக்கு இரண்டு நாட்கள் விடுப்பு ஊதியம் என்றவகையில் வழங்கப்பட வேண்டும்.

4. தற்போது இது தொடர்பாக முறையான வழிமுறை எதுவும் செயல்படுத்தப்படவில்லை. உதாரணமாக, கம்பாஹா மாவட்டத்தில் மேற்கண்ட கொடுப்பனவு குறித்து பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்படவில்லை, மொனராகல மாவட்டத்தில் டிசம்பர் மாதத்திற்கு மட்டும் 02 நாள் விடுப்பு செலுத்துமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கூறிய அபிவிருத்தி திட்டங்களை அமல்படுத்துவதற்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்படும் தொடர்புடைய கொடுப்பனவை செலுத்த நடவடிக்கை முன்னெடுக்கும் போது கடமைரீதியாக எங்களுக்கு கிடைக்கவேண்டிய வரப்பிரசாதங்கள் வழங்கப்படாவிடின் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image