அலுவலக போக்குவரத்து சேவைக்கு இரு மடங்கு கட்டணம்

அலுவலக போக்குவரத்து சேவைக்கு இரு மடங்கு கட்டணம்

 அலுவலக கடமைகளுக்கு செல்வதற்காக இன்று (15) முதல் நடைமுறைக்கு வரும்" சிட்டி பஸ்" போக்குவரத்தில் கட்டணம் பொதுப் போக்குவரத்து கட்டணத்தை விட 2 மடங்கு அதிகமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

முதற்கட்டமாக கொழும்பை அண்மித்த பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கா ஆரம்பிக்கப்படும் சிட்டி பஸ் சேவை இன்று மாகும்புரவில் இருந்து கொழும்பில் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. 10 நிமிடங்களுக்கு ஒரு தடவை சேவை வழங்கும் வகையில் இப்பஸ்கள்பயணிக்கவுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையத்தில் இருந்து இச்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, மாக்கும்பு தொடக்கம் புறக்கோட்டை வரையிலும் கோட்டையில் இருந்து மாக்கும்புர வரையிலும் 138 பாதை மற்றும் பத்தரமுல்ல ஊடாக இச்சேவை இன்று ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அருண

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image