All Stories

தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஊழியர் பலி

கொட்டதெனிய பிரதேசத்தில் தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் அங்கு பணியாற்றிய இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரு இந்தியர்கள் காயமடைந்துள்ளனர்.

தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஊழியர் பலி

இன்று முதல் அதிகரிக்கப்படும் ரயில் சேவைகள்

ரயில் சேவைகளின் எண்ணிக்கையை நாளை முதல் அதிகரிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது என்று இலங்கை ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய ரயில் சேவையின் பிரதான ரயில் பாதையில் 64 ரயில் சேவைகளும் கரையோர ரயில் பாதையில் 74 ரயில் சேவைகளும் களனிவௌி பாதையில் 12 ரயில் சேவைகளும் வடக்கு ரயில் பாதைகயில் 6 ரயில் சேவைகளும் புத்தளம் ரயில் பாதையில் 26 ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

பயணிகளுக்கு இலகுவாகும் வகையில் அனைத்து சேவைகளும் கால அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும் தூர பயண ரயில் சேவைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் பெரும்பாலான தூர ரயில் சேவை மற்றும் சரக்கு ரயில் சேவைகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படும் என்று தாம் நம்புவதாக தெரிவித்துள்ளது.

இன்று முதல் அதிகரிக்கப்படும் ரயில் சேவைகள்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image